பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி,  பன்னாட்டு அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின. 

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி,  பன்னாட்டு அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின. 
பயிற்சி முகாமில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் தலைமை வகித்துப் பேசினார். தலைமை ஆசிரியர் சி.பாஸ்கரன் வரவேற்றார். 
அரிமா மாவட்ட ஆளுநர் எம்.சரவணன் தொடக்கவுரையாற்றினார். அரிமா முதலாம் துணை ஆளுநர் கீதா கமலக்கண்ணன், இரண்டாம் துணை ஆளுநர் பெரி.முருகப்பன், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆர்.எம்.சுவேதகுமார், மாவட்ட அவைச் செயலர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் ஏ.கோபி, வடிவேல், வி.திலிப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினர். 
முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர்கள் ஜி.நடராஜன், வி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியர் டபுள்யு.பேர்லின் வில்லியம்ஸ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com