வடலூரில் தைப்பூச விழா ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர் மாவட்டம், வடலூர் சத்ய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற 21-ஆம்


கடலூர் மாவட்டம், வடலூர் சத்ய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவை முன்னிட்டு தரும சாலையில் மகாமந்திரம் ஓதுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிகழ்வு வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும். ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை ஞான சபையில் திருஅருள்பா முற்றோதல் நிகழ்ச்சியும், 20-ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச பெருவிழா 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, செவ்வாய்க்கிழமை (ஜன.22) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். 
இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவில் திருஅருள்பா கருத்தரங்கம், சொற்பொழிவுகளும் நடத்தப்படும்.
சித்தி வளாகத்தில் தைப்பூசம்: வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் ஜன.20-ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி தைப்பூசமும், 23-ஆம் தேதி சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெற உள்ளது. 
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தற்போது, சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், என்எல்சி நிறுவனத்தில் இருந்து வந்துள்ள பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தெய்வ நிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ஆர்.கருணாகரன், கணக்கர் ஞானபிரகாசம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com