பெண் கல்வி விழிப்புணர்வுப் பேரணி

அரசுப் பள்ளிகள் சார்பில் பெண் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. 

அரசுப் பள்ளிகள் சார்பில் பெண் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. 
இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த 100 மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்றாகும். எனவே, இந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கவும், அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிகள் அளவில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. 
இதன்படி, திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.நரசிம்மன் தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிருக்கான விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியதோடு பேரணியை தொடக்கி வைத்தார்.  ஆசிரிய, ஆசிரியைகள் பிரேமா, ராமச்சந்திரன், மரியஜோசப், தமிழ்வேந்தன், அமுதாபாய், சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.செல்வராஜ் தொடக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் க.பூங்கொடி,  துணை ஆய்வாளர் ஜெ.விஜயகுமார், பெற்றோர்-
ஆசிரியர் கழகத் தலைவர் 
ஏ.ஜெ.ரோஸ்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எஸ்.ரஹிமுன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய தெருக்களில் மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com