நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

குறிஞ்சிப்பாடி வட்டம், கே.கள்ளையன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சு.பூவராகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கே.கள்ளையன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சு.பூவராகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்தில் சுமார் 93 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் 120 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கிட வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதில், 98 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கே.கள்ளையன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சு.பூவராகன்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மாவட்ட மேலாளர் (கொள்முதல்) கிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவர் தாணூர் சண்முகம் ஆகியோர் அண்மையில் ஆய்வு செய்தனர். அப்போது, 537 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
சன்னரக நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.18.40, சாதாரண நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.18 வீதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை விவசாயிகளிடம் ஆய்வுக் குழுவினர் கேட்டறிந்தனர். 
இந்தத் தொகை உடனடியாக மின்னணு பரிமாற்றம் மூலமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து விவசாயிகளிடம் விளக்கினர்.
 மேலும், நிகழாண்டில் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் தங்களிடம் அளிக்கும் விவசாயிகளின் விவரங்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக டேப்லட் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வது குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தகவலாக சென்றடையும். 
மேலும், 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்கும் போது அதனை எவ்வாறு அளவீடு செய்ய வேண்டும் என்ற நெல் தூற்றும் இயந்திரத்தின் செயல்பாடும் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com