இரு சக்கர வாகன மானிய திட்டம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 விழுக்காடு (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) மானியத்தில் தமிழக அரசால்  இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் வாங்குவோருக்கு வாகனத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 31,250 வரை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதற்கான காலக்கெடு ஜன.18-ஆம் தேதியாக இருந்ததை தற்போது கால நீட்டிப்பு செய்து, இந்த மாதம் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். 
எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை சேர்க்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை 04142 - 292143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்க
ப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com