தைப்பூச விழாவில் காணாமல் போன 25 குழந்தைகள் உள்பட 65 பேர் மீட்பு

வடலூர் தைப்பூச விழாவில் காணாமல்போன 25 குழந்தைகள் உள்பட 65 பேரை காவல் துறையினர் மீட்டனர்.

வடலூர் தைப்பூச விழாவில் காணாமல்போன 25 குழந்தைகள் உள்பட 65 பேரை காவல் துறையினர் மீட்டனர்.
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
பக்தர்களுக்கான பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம், 8 துணைக் கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வாளர்கள், 42 உதவி ஆய்வாளர்கள், 400 காவலர்கள், வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள் 100 பேர், ஊர்க்காவல் படையினர் 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் தனி பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதில், 25 குழந்தைகள் உள்பட 65 பேர் காணாமல்போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், கூட்ட நெரிசலில் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நகை அணிந்து வந்த பெண்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ஊக்குகள் வழங்கப்
பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com