அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழா கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள்,


இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழா கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்
பட்டது.
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் அதன் பொறுப்பு அதிகாரி வெ.மதனகோபால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அலுவலக பணியாளர்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 
கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சரவணபவ கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் துணைப் பதிவாளர் மு.ஜெகத்ரட்சகன் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்வுகளில் சரக துணை பதிவாளர் பா.வெங்கடாசலபதி, இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் காந்திமதி, துணைப் பதிவாளர் வடிவேல் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கடலூர் வண்டிபாளையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மேலும் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தவர் கட்சியினருடன் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, ராகுல் காந்தியின் சக்தி திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், அன்பழகன், ராஜாராம், ராதாகிருஷ்ணன், கலைவாணன், ராமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலூர் துறைமுகத்தில் உள்ள மீனவர் அங்காடியில் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நிர்வாகிகள் பாமா, எம்.கந்தன், சி.வீரமுத்து, கோவிந்தம்மாள், அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் வரதராஜன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிர்வாகி சந்துருலோகேஷ், முன்னாள் ராணுவவீரர் முரளி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி துப்புரவு ஊழியர் பன்னீர்செல்வி கொடியேற்றினார். செயலர் மருதவாணன், தேவேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வே. முருகேசன் 
தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்புக்கான பயிற்சியை தேசிய மாணவர்படை கமாண்டிங் ஆபிஸர் லெப்டிணன்ட் கர்னல் மணீஷ்மல்கோத்ரா, லெப்டிணன்ட் கர்னல் பி. ரவிச்சந்திரன், கேப்டன் ஆர். கனகராஜன், கேப்டன் எம்.சீமான், கேப்டன் ஆர். சேவி, லெப்டிணன்ட் பி. பிரேம்குமார் ஆகியோர் செய்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
துணைவேந்தர் குடியரசு தின உரையில், தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக வேளாண்புல மாணவி திவ்யபாரதியை பாராட்டினார். அணிவகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் 90-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டத்தைச் சேர்ந்த 55 மாணவர்கள் பங்கேற்ற அண்ணாமலை-90 எனும் சைக்கிள் பேரணியை துணைவேந்தர் வே.முருகேசன், எம்எல்ஏ கே.ஏ. பாண்டியன் இணைந்து தொடக்கி வைத்தனர்.
சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தேசியக்கொடியை ஏற்றினார். கண்காணிப்பாளர் சக்திவேல் வரவேற்றார்.
பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் கே.சரவணன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பயிற்றுநர் சாந்தி தேசியக்கொடி ஏற்றினார். 
குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் அதன் முதல்வர் ஏ.பட்டாபிராமன் தலைமையில், புவனகிரி அரிமா சங்கத் தலைவர் ஆர்.ரகுநாதன் தேசியக்கொடி ஏற்றினார். சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சார்பில் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல முதல்வர் கபிலன் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் வரவேற்றார்.
ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன் தேசியக்கொடி ஏற்றினார். தலைமைஆசிரியர் கே.செல்வக்குமார் வரவேற்றார். முருகன் பிரைமரி, நர்சரி பள்ளியில் முதல்வர் அனிதா தலைமையில் நிர்வாகி எம்.ஜி.ராஜராஜன் தேசியக்கொடி ஏற்றினார். ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில், நிர்வாகி ஆர்.திருநாவுக்கரசு தலைமையில் முன்னாள் மாணவர் ஆர்.சிங்காரவேலு தேசியக்கொடி ஏற்றினார். 
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ந.சாந்தி தேசியக்கொடி ஏற்றினார். ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் செயலர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமையில் முன்னாள் வேளாண் பேராசிரியர் கு.சேதுசுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றினார்.
காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு கல்லூரி தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தார். எம்ஆர்கே நினைவு கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.ஆர்.தெய்வசிகாமணி தேசியக்கொடி ஏற்றினார். பொறியியல் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.வெங்கடேசன், நிர்வாக அலுவலர் 
இ.கோகுலகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதியில்....
நெய்வேலி, ஜன. 26: குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர்வி.ராம்நாத் தேசியக்கொடியேற்றினார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், செயலர் டி.ராஜாமணி, ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ஆர்.சிங்காரவேல் தேசியக்கொடி ஏற்றினார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் போக்குவரத்து ஆய்வாளர் செல்வம், ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றினர். பள்ளி தாளாளர் எம்.வீரதாஸ் வரவேற்றார். பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமையாசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், தி நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில், பள்ளி தாளாளர் எம்.வீரதாஸ் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை உமாசம்பத் நன்றி கூறினார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வி.சக்திவேல் முன்னிலையில், துணைத் தலைவர் ஜி.காமராஜ் தேசிய கொடியேற்றினார். 
பண்ருட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தேசிய கொடியேற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com