விருத்தாசலம் புதிய மாவட்டம் கோரி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்

விருத்தாசலத்தை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோரி கிராம சபை கூட்டங்களில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


விருத்தாசலத்தை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோரி கிராம சபை கூட்டங்களில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதியாகத் திகழும் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 
இதற்காக போராட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தனி மாவட்டம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது என போராட்டக்குழு முடிவெடுத்தது.
அதன்படி, சனிக்கிழமை விருத்தாசலம் கோட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து தகுதிகளும் கொண்ட விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி ஸ்ரீமுஷ்ணம் வட்டத்துக்குள்பட்ட கார்மாங்குடி, கொக்கரசன்பேட்டை, திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட முருகன்குடி, வேட்டக்குடி, விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட எருமனூர், பரவலூர், வண்ணாங்குடிகாடு, வேப்பூர் வட்டத்துக்குள்பட்ட சிறுப்பாக்கம் உள்பட பெரும்பாலான கிராமங்களில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com