அண்ணாமலைப் பல்கலை.யில் தேசியக் கருத்தரங்கம்
By DIN | Published On : 29th January 2019 09:26 AM | Last Updated : 29th January 2019 09:26 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல உழவியல் துறை சார்பில், "நீடித்த நிலையான வேளாண்மைக்கான காலநிலை மீள் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
உழவியல் துறைத் தலைவர் சு.நடராஜன் வரவேற்றார். வேளாண்புல முதல்வர் கோ. தாணுநாதன் தலைமை வகித்தார். கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கர்நாடகம் ஹாசன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக புல முதல்வர் என்.தேவக்குமார் பங்கேற்றுப் பேசினார். கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை துணைவேந்தர் வெளியிட்டார். கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று கருத்துரை வழங்கினர். உதவிப் பேராசிரியர்கள் ப.ஆனந்தன், கே.பி. செந்தில்குமார் ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.
உதவிப் பேராசிரியர் ப. ஆனந்தன் நன்றி கூறினார்.