ஜாக்-ஜியோ கூட்டமைப்பு இன்று முதல்காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஜாக்-ஜியோ கூட்டமைப்பு புதன்கிழமை (ஜன.30) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.


ஜாக்-ஜியோ கூட்டமைப்பு புதன்கிழமை (ஜன.30) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை (ஜன.30) சென்னையில் கோட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்று மறியல் போராட்டம் நடத்தப் போவதாக சங்கத்தின் மாநில மாநாட்டில் முடிவெடுத்துள்ளோம். 21 சங்கங்கள் இணைந்த ஜாக்-ஜியோ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com