போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 79 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தல்

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 79 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 79 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைத் தடுக்கும் அரசாணை எண். 56-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 இந்த போராட்டம் 7 -ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. எனினும், குறைவான அளவிலேயே சங்கத்தினர் பங்கேற்றதுடன், ஓய்வு பெற்ற சங்கத்தினருடன் இணைந்து கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
 இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் கூறியதாவது:
 ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதியும், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
 மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட 79 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
 இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது: மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தகவல் இல்லாமல் பள்ளிக்கு வராததாலும் 39 தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், 40 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீதும் தற்காலிகப் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 இவர்களுக்கு அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, பள்ளிக்கு வராதவர்களுக்கு 17 பி நோட்டீஸýம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com