மகாத்மா காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பள்ளிகள் சார்பில் காந்தியடிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பள்ளிகள் சார்பில் காந்தியடிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், கடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அந்தக் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகர் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்.
 கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், கடலூர் நகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமையில், பொதுச் செயலர் மு.மருதவாணன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, உடனிருந்தவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
 மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில், மன்றத் தலைவர் கடல்.நாகராஜன் தலைமையில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தனிப் பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில்முருகன், காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தியின் சுதந்திரப் போராட்டம் குறித்து ஆசிரியை மாலதி உரையாற்றினார்.
 இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் காந்தியடிகளின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
 சிதம்பரத்தில்... சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தப் பள்ளி நிர்வாகி வீனஸ் எஸ்.குமார், பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி ஆகியோர் காந்தியடிகள் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 இதேபோல, சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "தமிழ்நாட்டில் காந்தி' என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 பள்ளித் தலைமை ஆசிரியர் மு.சிவகுரு தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜே.பி.சங்கரன் வரவேற்றார்.
 அரிமா சங்கத் துணை ஆளுநர் பெரி.முருகப்பன், காந்திமன்றத் தலைவர் மு.ஞானம் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தமிழாசிரியர் கல்யாணராமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com