பல்கலைக்கழக விடுதியை தூய்மை செய்த மாணவர்கள்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிதம்பரம் அண்ணாமலைநகர் 6-ஆவது என்சிசி பட்டாலியன் சார்பில் 150 என்சிசி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிதம்பரம் அண்ணாமலைநகர் 6-ஆவது என்சிசி பட்டாலியன் சார்பில் 150 என்சிசி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் (தாமரை இல்லம்) தூய்மைப் பணியில் அண்மையில் ஈடுபட்டனர்.
 அதன் தொடர்ச்சியாக கேம்ப் கமாண்டன்ட் ஆர்.சிவதாஸ் முன்னிலையில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், வேளாண் புல முதல்வர் சாந்தா கோவிந்த், தாமரை இல்ல விடுதி காப்பாளர் வி.சொர்ணபிரியா ஆகியோர் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் துணை கமாண்டன்ட் கனகராஜன், மேஜர் சந்திரப்பா, தலைமை அலுவலர் ரமேஷ், தர்மராஜன், முதன்மை அலுவலர் குமார், சந்திரபாபு, பி.ஹெச்.எம்.சரவணகுமார், தாமரை இல்ல துணை விடுதிக் காப்பாளர் எஸ்.வெண்ணிலா, எம்.விஜயபிரியா, டி. ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com