மாற்றுத் திறனாளிகளுக்கு  நலத் திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தல் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: அனைத்து மாற்றுத் திறனாளிகளும் மத்திய அரசின் அடையாள அட்டையைப் பெற தவறாது  விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல, அரசு மானியத்துடன் கடன் பெறும் மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதேபோல, பெற்ற கடனைச் சரியான முறையில் வங்கிக்குச் செலுத்தினால்தான் கூடுதலான நபர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனை வழங்க முடியும்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலினை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, 8 பேருக்கு மொத்தம் ரூ. ஒரு லட்சத்தில் வங்கிக் கடன் மானியமும், 2 நபர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பேருந்து பயணச் சலுகை அட்டையும் வழங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, அரசுத் துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com