தைல மரத் தோப்பில் தீ விபத்து
By DIN | Published On : 12th June 2019 08:47 AM | Last Updated : 12th June 2019 08:47 AM | அ+அ அ- |

கடலூர் அருகே தைல மரத் தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் புருகீஸ்பேட்டை அருகே கொண்டங்கி ஏரி உள்ளது. அதனையொட்டி ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் தைல மரத்தோப்பு உள்ளது. ஏற்கனவே மரங்களை வெட்டிய பின்னர் அதன் கீழ் புறத்தில் தற்போது கன்றுகள் வளர்ந்துள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் இந்த தோப்பில் கொட்டி கிடந்த சருகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பீடி, சிகரெட் துண்டுகளை வீசி எரிந்ததால் சருகுகள் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் தைல மரக்கன்றுகள் தப்பின. இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.