சாராயம் விற்பனை: தம்பதி கைது
By DIN | Published On : 18th June 2019 09:35 AM | Last Updated : 18th June 2019 09:35 AM | அ+அ அ- |

சாராயம் விற்பனை தொடர்பாக தம்பதி கைதுசெய்யப்பட்டனர்.
கடலூர் முதுநகர் போலீஸார் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பனங்காட்டு காலனி பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (50), அவரது மனைவி வனிதா (42) ஆகியோர் சாராயம் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 220 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவியை கைது செய்தனர்.