போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது
By DIN | Published On : 18th June 2019 09:34 AM | Last Updated : 18th June 2019 09:34 AM | அ+அ அ- |

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் மகன் விமல்ராஜ் (25). கொத்தனார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 15-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விமல்ராஜை கைதுசெய்தனர்.