வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் அரசுக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் அரசுக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள அரசு கலைக் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் வியாழக்கிழமை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஆட்சியர் பேசியதாவது: தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 8530 என்ற எண்ணிலும் கட்டணமில்லாமல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் உடனடியாகப் பெயரைச் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சார்- ஆட்சியர் கே.எம்.சரயூ, எம்.எஸ்.பிரசாந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சு.பழனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரா.பானுகோபன், தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com