உலக சிட்டுக் குருவி தின விழா

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் அருகே புதுசத்திரத்தில் பசுமை அமைப்பு சார்பில் சிறுதானிய உணவு அடங்கிய பெட்டிகள் பொதுமக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் அருகே புதுசத்திரத்தில் பசுமை அமைப்பு சார்பில் சிறுதானிய உணவு அடங்கிய பெட்டிகள் பொதுமக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
 செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சு, இயற்கைச் சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை சிட்டுக் குருவிகளின் வாழ்வியலில் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த இனமே அழியும் நிலைக்கு தள்ளிவிட்டன. அரிதாகி வரும் இந்தக் சிட்டுக் குருவிகள் சிதம்பரம் அருகே புதுசத்திரம் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. ஆகவே, அப்பகுதியில் பசுமை அமைப்பு சார்பில் உலக சிட்டுக் குருவி தினம் (மார்ச் 20) கடைப்பிடிக்கப்பட்டது. அதன் தலைவர் உதவிப் பேராசிரியர் ஆர்.சரவணன் ஆகியோர் சிட்டுக் குருவிகளை வளர்க்க ஏதுவாக சிறுதானிய உணவு அடங்கிய உணவுப் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ஆர்.சரவணன், செயலாளர் இ.பாலசுப்பிரமணியன், இயற்கை ஆர்வலர் பி.நிரஞ்சன்குமார், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவண் அமைப்பு நிர்வாகிகள் வேத.இளவரசன், பி.டி.செந்தில்குமார், ஞான.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com