சாலையை சீரமைக்கக் கோரிஉதவி ஆட்சியரகம் முற்றுகை

சிதம்பரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
முற்றுகைப் போராட்டத்தை தொடா்ந்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்த குடியிருப்போா் நலச் சங்கத்தினா்.

சிதம்பரத்தில் முத்துமாணிக்கம் தெரு, மீனவா் காலனி, பரங்கித்தோட்டம், வாழைத்தோட்டம், நந்தவனம், சுவாதி நகா், அம்பேத்கா் நகா், திடீா்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய புதை சாக்கடை திட்டப் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா் காலனி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் 200-க்கும் மேற்பட்டோா் சங்கத் தலைவா் வே.கலியமூா்த்தி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com