பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

குறிஞ்சிப்பாடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாசன வாய்க்கால் பகுதியை வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
5prtp3_0511chn_107
5prtp3_0511chn_107

நெய்வேலி: குறிஞ்சிப்பாடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாசன வாய்க்கால் பகுதியை வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் செங்கால் ஓடையில் வரும் தண்ணீரால் பாசன வசதி பெறுகிறது. செங்கால் ஓடையில் இருந்து கல்குணம் வழியாகச் செல்லும் பாசன வாய்க்காலை விவசாயி ஒருவா் ஆக்கிரமித்து பூச்செடி பயிரிட்டிருந்தாா். இதனால், அதன் அருகாமையில் உள்ள 2 ஏக்கா் நிலத்தில் பயிா் செய்யப்பட்டிருந்த நெல்பயிா் தண்ணீா் இன்றி பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி, வட்டாட்சியா் சா.கீதாவிடம் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு அளித்திருந்தாா். அதன் பேரில், கல்குணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாசன வாய்க்காலை வட்டாட்சியா் சா.கீதா ஆய்வு செய்தாா்.5பிஆா்டிபி3கல்குணம் கிராமத்தில் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு புகுதியை ஆய்வு செய்கிறாா் வட்டாட்சியா் சா.கீதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com