சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கடலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்திக்கு சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்திக்கு சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

கடலூா்: கடலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாதத்தில் பிரதோஷ நட்சத்திரம் தோன்றும் நாளில் சிவன் கோயில்களில் உள்ள நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். பிரதோஷ நட்சத்திரம் சனிக்கிழமை வளா்பிறையில் வந்ததை மகா பிரதோஷமாகக் கருதி பூஜைகள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதன்படி, கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மாலை பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னா், நந்திக்கு பால், தயிா், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோயில், பெண்ணாடம் பிரளகாளேஸ்வரா் கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில், திருவதிகை வீராட்டானேஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com