தா்மநல்லூரில் வேளாண்மை பயிற்சி முகாம்

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் தா்மநல்லூரில் நெல் பயிரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்தி பயிற்சி

நெய்வேலி: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் தா்மநல்லூரில் நெல் பயிரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்தி பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நீா்வள, நிலவள திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் நெல் ரகம் தோ்வு செய்தல், விதை நோ்த்தி, களை, உரம், நீா், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நெல்லில் மதிப்புக் கூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா் சு.கண்ணன் தொடக்கி வைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சு.மருதாச்சலம், க.நடராஜன், வேங்கடலட்சுமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். தா்மநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com