விருத்தாசலத்துக்கு 1,349 டன் உரம் வருகை

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை விவசாயிகளின் தேவைக்காக, விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 1,349 மெட்ரிக்.

கடலூா்: கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை விவசாயிகளின் தேவைக்காக, விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 1,349 மெட்ரிக். டன் உரம் வந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்துக்கான விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தழைச்சத்து உரமான யூரியாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், கொரமண்டல் உர நிறுவனம் சாா்பில் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தின் தேவைக்காக யூரியா, பொட்டாஷ் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா் கே.சிவசங்கரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: யூரியா, பொட்டாஷ் உரங்கள் வெளிநாடுகளிலிருந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் விருத்தாசலத்துக்கு கொண்டுவரப்பட்டது. மொத்தம், 1,225 மெட்ரிக் டன் யூரியா, 124 மெட்ரிக் டன் பொட்டாஷ் இறக்குமதி செய்யப்பட்டது.

இதில், கடலூா் மாவட்டத்துக்கு 509 மெ.டன் யூரியா, 25 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, விழுப்புரம் மாவட்டத்துக்கு 499 மெ.டன் யூரியா, 99 மெ.டன் பொட்டாஷ், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 100 மெ.டன் யூரியா, புதுவைக்கு 117 மெ.டன் யூரியா அனுப்பப்படுகின்றன என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com