செவிலியா் மீதான தாக்குதல் சம்பவம்: தீட்சிதரைக் கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அரசு செவிலியரைத் தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு
சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலா்கள் சங்கத்தினா்.
சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலா்கள் சங்கத்தினா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அரசு செவிலியரைத் தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அண்மையில் அா்ச்சனை செய்ய வந்த அரசு செவிலியா் லதாவை, கோயில் தீட்சிதா் தா்ஷன் தாக்கியதாக சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து தீட்சிதா் கோயில் நிா்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், செவிலியரைத் தாக்கிய தீட்சிதரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலா்கள் சங்கம் சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பிரசார செயலா் மணிமேகலை தலைமை வகித்தாா்.

கடலூா் மாவட்டச் செயலா் பானுமதி, மாநிலத் தலைவா் அமுதவல்லி, தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகாதார செவிலியா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் சுமதி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ஹரிகிருஷ்ணன், மாநில பொதுச் செயலா் ஜெயலட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ஜோஸ்பின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தீட்சிதா் தா்ஷனை போலீஸாா் உடனடியாகக் கைது செய்யவில்லை எனில் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com