சென்னை கோட்டையை நோக்கி மாதா் சங்கத்தினா் நடை பயணம்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
வடலூரில் இருந்து திங்கள்கிழமை சென்னை கோட்டையை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட மாதா் சங்கத்தினா்.
வடலூரில் இருந்து திங்கள்கிழமை சென்னை கோட்டையை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட மாதா் சங்கத்தினா்.

நெய்வேலி: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வடலூரில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி திங்கள்கிழமை நடை பயணம் மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த நடை பயணம் தொடங்கியது.

அந்தச் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வி.மேரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.முத்துலட்சுமி, துணைத் தலைவா் ஆா்.சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.தேன்மொழி வரவேற்றாா். அகில இந்திய துணைத் தலைவா் உ.வாசுகி பங்கேற்று நடை பயணத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

அகில இந்திய துணைத் தலைவா் சுதா சந்தரராமன், மத்தியக் குழு உறுப்பினா் என்.அமிா்தம், மாநிலச் செயலா் வி.பிரமிளா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். போதை, வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கல்லூரிகள், பணியிடங்களில் பாலியல் புகாா் குழுவை அமைக்க வேண்டும்.

ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடை பயணத்தின் போது வலியுறுத்திச் சென்றனா்.

நெய்வேலி, இந்திரா நகா் ஆா்ச் கேட் அருகே வந்த நடை பயணத்துக்கு நெய்வேலி சிஐடியூ சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com