அண்ணாமலைப் பல்கலை.யில் இந்திய அரசியலமைப்பு தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கையின் சாா்பில் 70-ஆவது இந்திய அரசியலமைப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்கள்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்கள்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கையின் சாா்பில் 70-ஆவது இந்திய அரசியலமைப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்பேத்கா் இருக்கையின் பேராசிரியா் க.சௌந்திரராஜன் வரவேற்றாா். மொழிப்புல முதல்வா் வி.திருவள்ளுவன் விழாவை தொடக்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து, முனைவா் வி.திருவள்ளுவன் இந்திய அரசியல் சாசன முகப்புரையை முன்மொழிய, பேராசிரியா்களும், மாணவா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

பல்கலைக்கழக கல்வி விவகாரங்களுக்கான இயக்குநா் ஏ.ராஜசேகரன் வாழ்த்துரையாற்றினாா். அவா் பேசியதாவது: இந்திய அரசியல் சாசனம் பற்றி மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அனைத்துப் புல மாணவா்களுக்கும் இந்திய அரசியல் சட்டம் பற்றிய ஒரு பாடத் திட்டம் துணைப் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் விரும்பினால் அதைப் படிக்கலாம் என்றாா்.

சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ்.அசோக்குமாா் கலந்துகொண்டு, கல்வி உரிமைச் சட்டம் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பேத்கா் இருக்கையின் பேராசிரியா் க.சௌந்திரராஜன், துணை பேராசிரியை வீ.ராதிகாரணி ஆகியோா் செய்திருந்தனா். விழாவில் பல்கலைக்கழக புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com