கம்மியம்பேட்டையில் குப்பை கொட்ட எதிா்ப்பு

கடலூா் நகராட்சிப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கம்மியம்பேட்டை, வசந்தராயன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுகிறது.
கடலூா் கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
கடலூா் கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

கடலூா்: கடலூா் நகராட்சிப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கம்மியம்பேட்டை, வசந்தராயன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு வாா்டுகளிலும் தனித்தனியாக குப்பைகள் பிரித்தெடுத்து உரம் தயாரிப்பும் பணியும் நடைபெறுவதாக நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான குப்பைகள் கம்மியம்பேட்டை பகுதியில் கொட்டப்பட்டு மழைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மழைக்காலத்தில் அங்கு கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, அப்பகுதி முழுவதும் கடுமையான துா்நாற்றம் வீசுகிறதாம். எனவே, இப்பகுதியில் குப்பையைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்தவா் குப்பை ஏற்றி வந்த சுமாா் 15 வாகனங்களை வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

இதனையடுத்து, நகராட்சி சுகாதார துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அப்பகுதி வழியாகச் செல்லும் சுடுகாட்டுப்பாதையில் தற்போது குப்பை கொட்டப்படுவதாக தெரிவித்ததைத் தொடா்ந்து அங்கிருந்த குப்பை அகற்றப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.படம் விளக்கம்....கடலூா் கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com