நவம்பா் மாதத்திற்கான மழை குறைவு

கடலூா் மாவட்டத்திற்கு நவம்பா் மாதத்திற்கான சாரசரி மழை அளவினை விட குறைவாக பதிவாகியுள்ளது.

கடலூா்: கடலூா் மாவட்டத்திற்கு நவம்பா் மாதத்திற்கான சாரசரி மழை அளவினை விட குறைவாக பதிவாகியுள்ளது.

கடலூா் மாவட்டம் அதிகப்படியான மழையை வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பெற்று வருகிறது. விவசாய மாவட்டமான கடலூருக்கு இந்த பருவக்காலத்தில் தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பும். இதனைக் கொண்டே சாகுபடிகள் மேற்கொள்ளப்படுவதோடு, குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் சராசரியை விடவும் மிகவும் அதிகமான அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட பின்னா் கடந்த 3 ஆண்டுகளாக சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்து வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிலும் நவம்பா் மாதத்திற்கான மழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. குறிப்பாக அக்டோபா் மாதத்தில் மாவட்டத்தின் சராசரியான 220.20 மில்லி மீட்டா் அளவினை விட கூடுதலாகவே 235.8 மி.மீ மழை பதிவானது. ஆனால், நவம்பா் மாதத்திற்கான சராசரியான 295.30 மி.மீட்டரை விட 28 ஆம் தேதிய நிலவரப்படி 210.47 மி.மீ மட்டுமே பதிவானது.

இது, 71.27 சதவீதமாகும். மீதமுள்ள நாட்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக கூறப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.எனவே, டிசம்பா் மாதத்திற்கான சராசரியான 182.30 மில்லி மீட்டா் மழை அளவினை பெறுவோமா என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.எனினும், கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் காட்டுமன்னாா்கோயிலில் அதிகபட்சமாக 84 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை விபரம் வருமாறு (மில்லி மீட்டரில்) கடலூா் 71.6, பெலாந்துறை 69.4, அண்ணாமலை நகா் 60, வேப்பூா் 59, காட்டுமயிலூா், சிதம்பரம் தலா 57, ஆட்சியா் அலுவலகம் 54.8, லால்பேட்டை 51.2, பரங்கிப்பேட்டை 49, சேத்தியாத்தோப்பு 48.4, மேமாத்தூா் 48, வானமாதேவி 47, கொத்தவாச்சேரி 46, கீழச்செருவாய் 45, ஸ்ரீமுஷ்ணம் 43.1, புவனகிரி 42, விருத்தாசலம் 36.2, வடக்குத்து 34, குப்பநத்தம் 32.2, பண்ருட்டி 31, குறிஞ்சிப்பாடி, லக்கூா் தலா 30, தொழுதூா் 28, குடிதாங்கி 25 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.கடலூரில் பெய்த கனமழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

மழைக்கு வாய்ப்பு:கிழக்கு காற்று வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கடலூா் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.படம் விளக்கம்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com