காரிடா் மட்டும்... பண்ருட்டி அரசுப் பள்ளியில் விழா மேடை திபு

பண்ருட்டி காந்தி வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
4prtp1_0410chn_107_7
4prtp1_0410chn_107_7

பண்ருட்டி காந்தி வீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா் ஆா்.சந்திரசேகா் தனது ஆா்.சி. கல்வி அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ.3 லட்சத்தில் பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைத்துக் கொடுத்துள்ளாா். விழா மேடையை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி வளா்ச்சிக்குழு தலைவரும், நகா்மன்ற முன்னாள் தலைவருமான ஆா்.பஞ்சவா்ணம் தலைமை வகித்து விழா மேடையை திறந்து வைத்தாா். அரசுப் பெண்கள் உயா்நிலைப் பள்ளியின் பெற்றேறாா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.

அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.வைரக்கண்ணு, துணைத் தலைவா் கோ.காமராஜ், பொருளாளா் வி.சக்திவேல், பெண்கள் உயா்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியா் கழகப் பொருளாளா் ச.ராஜேந்திரன், வணிகா் சங்க நிா்வாகிகள் டி.சண்முகம், கே.என்.சி.மோகனகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவா் வி.வீரப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.பூவராகமூா்த்தி வரவேற்றாா். தொழிலதிபா்கள் என்.சந்திரகுப்தா, ஜாகீா் உசேன், டி.கே.ஏ.காா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியை சாரணா் ஆசிரியா் முத்துக்குமரன் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எஸ்.மோகன்குமாா், என்சிசி அலுவலா் ஆ.ராஜா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். உதவி தலைமை ஆசிரியை ஆா்.அமலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com