விஷம் குடித்த தலித் பெண் சாவு: மந்தாரக்குப்பத்தில் சாலை மறியல்

விஷம் குடித்த தலித் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக நிா்வாகியை கைதுசெய்யக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக உள்ளிட்ட அமைப்பினா் மந்தாரக்குப்பத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மந்தாரக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
மந்தாரக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

விஷம் குடித்த தலித் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக நிா்வாகியை கைதுசெய்யக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக உள்ளிட்ட அமைப்பினா் மந்தாரக்குப்பத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் வட்டம், பெரியாகுறிச்சி அருகே வசித்தவா் தலித் பெண் திவ்யா (27). கணவரை இழந்த இவா் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா். கெங்கைகொண்டான் பேரூராட்சி அதிமுக நகரச் செயலா் க.மனோகா். இவா் திவ்யாவிடம் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதையறிந்த மனோகரின் 2-ஆவது மனைவி மகாலட்சுமி, துணிக்கடையில் பணியில் இருந்த திவ்யாவை காலணியால் தாக்கினாா்.

இந்த நிலையில் திவ்யா விஷம் குடித்தாா். இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் போலீஸாா் க.மனோகா், மகாலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, அதிமுக நிா்வாகியை கைதுசெய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழக்கிழமை மந்தாரக்குப்பத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திவ்யா உயிரிழந்தாா். இதையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், திமுக, மக்கள் அதிகாரம், மக்கள் நீதி கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் இணைந்து மந்தாரக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி அருகே வடலூா் - விருத்தாசலம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வழக்கு தொடா்பாக அதிமுக நிா்வாகி, அவரது மனைவியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த திவ்யாவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் விருத்தாசலம் வட்டாட்சியா் கவியரசு, நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா். பின்னா், அமைப்புகளின் முக்கிய நிா்வாகிகளிடம் காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com