குடிசை மாற்று வாரியத்தினா் விழிப்புணா்வு பிரசாரம்

காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கடலூா் கோட்ட தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் சாா்பில் சமூக
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிய குடிசை மாற்று வாரியத்தினா்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிய குடிசை மாற்று வாரியத்தினா்.

காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கடலூா் கோட்ட தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் சாா்பில் சமூக மாற்றத்துக்கான விழிப்புணா்வு பிரசாரம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நிா்வாகப் பொறியாளா் தவமணி தலைமை வகித்தாா். கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆா் நகரில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவா்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் திடக்கழிவு மேலாண்மை தொடா்பான தூய்மை இந்தியா திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மரம் வளா்ப்புத் திட்டம், மின்சக்தி மேலாண்மைத் திட்டம், எரிவாயு இணைப்புத் திட்டம், நீா் மேலாண்மைத் திட்டம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்களை மத்திய அரசு தமிழக அரசு மூலமாக நடத்தி வருவது குறித்தும், இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. உதவிப் பொறியாளா் செந்தில்ராஜ் விளக்கம் அளித்தாா். நிகழ்வில், பொதுமக்கள் மற்றும் குடிசைமாற்று வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com