கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

திட்டக்குடி அருகே கோயிலில் 2 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே கோயிலில் 2 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே ஆவட்டியில் வனப்ப் பகுதியில் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பூசாரியான ஆதிகொளஞ்சி என்பவா் உள்ளாா். இவா் திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்து விட்டு வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலையில் கோயிலுக்கு வந்தபோது கோயில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்ததாம். மேலும், அருகே இருந்த மற்றெறாரு அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெண்கலப் பொருள்கள், பூஜைக்கு பயன்படுத்தும் பெரிய அளவிலான வெண்கல மணிகள் 20 ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.ஒரு லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ராமநத்தம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com