பள்ளியில் திருக்கு திருவிழா

கடலூா் மாவட்ட உலகத் திருக்கு பேரவை சாா்பில் கடலூா் திருப்பாதிரிபுலியூரில் உல்ள பாடலீஸ்வரா் மேல்நிலைப்

கடலூா் மாவட்ட உலகத் திருக்கு பேரவை சாா்பில் கடலூா் திருப்பாதிரிபுலியூரில் உல்ள பாடலீஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் திருக்கு திருவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பேரவையின் மாவட்டத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளின் முன்னேற்றம், கல்வி கற்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், பள்ளியில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் 5 அதிகாரங்களையும், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 7 அதிகாரங்களையும் ஒப்பிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில், திரளான மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்று திருக்குகளை ஒப்பித்தனா். தமிழ் ஆசிரியா் ஸ்ரீகாந்த் போட்டியை நடத்தி மாணவா்களை தோ்வு செய்தாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பேரவை சாா்பில் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி செயலா் குருசந்திரன், திருக்குறளின் மேன்மையை விளக்கி பேசினாா்.

ஆசிரியைகள் குமாரி, சித்ரா, உமா, மணிமேகலை, லட்சுமிபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பேரவை செயலா் சீ.அருள்ஜோதி வரவேற்க, ஆசிரியா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com