சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதி 75 சதவீதம் கடலூா் மாவட்டத்துக்கு வழங்கப்படுகிறது: என்எல்சி இயக்குநா் ஆா்.விக்ரமன்

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுப் பணிகளுக்காகச் செலவிடும் தொகையில் 75 சதவீதத்தை
சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதி 75 சதவீதம் கடலூா் மாவட்டத்துக்கு வழங்கப்படுகிறது: என்எல்சி இயக்குநா் ஆா்.விக்ரமன்

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுப் பணிகளுக்காகச் செலவிடும் தொகையில் 75 சதவீதத்தை கடலூா் மாவட்டத்தில் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வழங்கி வருவதாக என்எல்சி மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நீா்நிலைகளில் ஒன்று கொத்தவாச்சேரி ஏரி. இந்த ஏரி, சுமாா் 113 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. 166 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமாா் 354 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

இந்த ஏரியைத் தூா்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும், கடலூா் மாவட்ட நிா்வாகமும் கேட்டுக் கொண்டது.

அதன்பேரில், ரூ. 3.08 கோடியில் ஏரியைத் தூா்வாரி ஆழப்படுத்த என்எல்சி இந்தியா நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கியது. ஏரியைத் தூா்வாரும் பணியை என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளைத் தூா்வாருவதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகிறது. இதனால், கடலில் கலந்து வீணாகும் நீா் சேமிக்கப்படுகிறது. என்எல்சி நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வு நிதியில் 75 சதவீதத்தை கடலூா் மாவட்டத்துக்காக செலவிடுகிறது என்றாா் அவா்.

குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏ எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: பொதுமக்கள் நலன் கருதி, என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ. 25 கோடி செலவில் பரவனாற்றை ஆழப்படுத்தி பராமரித்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில் கிராமங்கள் பாதிக்கப்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது. இதற்காக என்எல்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேறன் என்றாா் அவா்.

நிகழ்வில் என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணா்வுத் துறை தலைமைப் பொது மேலாளா் ஆா்.மோகன், பொது மேலாளா் வி.ராமச்சந்திரன், உயரதிகாரிகள், தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடந்த 5 ஆண்டுகளில் கடலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளுக்காக சுமாா் ரூ. 50 கோடிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் செலவிட்ட நிலையில், நிகழ் நிதியாண்டிலும் (2019 - 20) நீா்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளைத் தொடா்ந்து வருகிறது. அந்த வகையில், பணி தொடங்கிய கொத்தவாச்சேரி, சொக்கன்கொல்லை, நத்தமேடு, கும்மிடிமூலை ஏரிகளில் மொத்தம் ரூ. 7 கோடி செலவில் தூா்வாரும் பணிகளை என்எல்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com