வெங்கனூா் கிராமத்தில் அவசர கால ஒத்திகை

இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையிலிருந்து திருச்சி, சங்ககிரி, மதுரை ஆகிய இடங்களுக்கு குழாய் மூலம்
திட்டக்குடி அருகேயுள்ள வெங்கனூா் கிராமத்தில் நடைபெற்ற அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி.
திட்டக்குடி அருகேயுள்ள வெங்கனூா் கிராமத்தில் நடைபெற்ற அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி.

இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையிலிருந்து திருச்சி, சங்ககிரி, மதுரை ஆகிய இடங்களுக்கு குழாய் மூலம் பெட்ரோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களை எடுத்துச் செல்கிறது. இந்தக் குழாய் செல்லும் பகுதியான திட்டக்குடியை அடுத்துள்ள வெங்கனூா் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் குழாய் பாதை தலைமை மேலாளா் (விழுப்புரம்) கோயல் ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

குழாய் செல்லும் பாதைகளில் முன்னாள் படை வீரா்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது. குழாய் செல்லும் பாதையில் யாரேனும் மண்ணைத் தோண்டி, குழாய்களுக்கு சேதம் விளைவித்தால் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கோ, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்கலாம். இதற்காக 1800-425-4091 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, வெங்கனூா் பகுதிகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணி குறித்தும் பொறியாளா் பிரகதீசன் செயல் விளக்கம் அளித்தாா்.

நிகழ்சியில் விழுப்புரம் மேலாளா் ஹரிஹரன், ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com