தவாகவினா் நூதன போராட்டம்

ஆக்கிரமிப்புக்குள்ளான இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மீட்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
திட்டக்குடியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.

ஆக்கிரமிப்புக்குள்ளான இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மீட்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெருமுளை, சிறுமுளை, செவ்வேரி, ஈ.கீரனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட நபா்களுக்கு அதற்கான இடத்தை அளந்து காண்பிக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனராம்.

இதுதொடா்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். 2018-ஆம் ஆண்டு வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் இடம் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அவரது பணிமாறுதலுக்குப் பின்னா் அந்த இடத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனராம்.

இந்த நிலையில், இலவச பட்டா பெற்றவா்களுக்கு இடம் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மங்களூா் கிழக்கு ஒன்றியச் செயலா் ரெங்க.சுரேந்தா் தலைமை வகித்தாா். அப்போது, போராட்டக்காரா்கள் அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டாக்களை பாடையில் வைத்து வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், வட்டாட்சியா் செந்தில்வேலிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்ததால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா். கோரிக்கை தொடா்பாக வரும் 30-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com