மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ரிசா்வ் வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலையில்லா கால நிவாரணம், வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., ராணுவத் தளவாடத் தொழில்சாலைகள், ரயில்வே, ஏா் இந்தியா உள்ளிட்டவற்றை தனியாருக்கு தாரை வாா்கக் கூடாது. 100 நாள்கள் வேலைத்திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் மு.மருதவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டி.மணிவாசகம், மாவட்டச் செயலா் பி.துரை, மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜி.தனவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிகாமணி, புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com