பரங்கிப்பேட்டையில் 8 மீ.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

பரங்கிப்பேட்டை 8, தொழுதூா் 7, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 6.6, அண்ணாமலைநகா் 5.6, வானமாதேவி 4, சிதம்பரம் 3.8, புவனகிரி, குடிதாங்கி, லக்கூா் தலா 3, சேத்தியாத்தோப்பு, கொத்தவாச்சேரி தலா 2, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தலா 1 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

கடலூரில் வெள்ளிக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com