காலபைரவர் சிலை கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின் போது காலபைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பண்ருட்டி அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின் போது காலபைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பண்ருட்டியை அடுத்துள்ள சின்ன நரிமேடு கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளம் சீரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் இந்தப் பணியின் போது, மாலை 5 மணியளவில் குளத்தில் இருந்து காலபைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.  0.8 மீட்டர் உயரம், அடி பீடம் 0.2 மீட்டர்,  0.9 மீட்டர் சுற்றளவு கொண்ட இந்தச் சிலையின் வலது கை உடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சரவணன் சிலையை மீட்டு, பண்ருட்டி வட்டாட்சியர் எஸ்.கீதாவிடம் ஒப்படைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com