கொள்ளிடத்தில் கதவணை: தமிழக அரசுக்கு கீழணை பாசன விவசாயிகள் சங்கம் நன்றி

கொள்ளிடம் ஆற்றில் மா.ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கதவணை அமைக்கும் பணியை செயல்படுத்தி வரும்

கொள்ளிடம் ஆற்றில் மா.ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கதவணை அமைக்கும் பணியை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மலர் வெளியீட்டு விழா குமராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்து பேசினார். நன்றி அறிவிப்பு மலரை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட, அதனை சிதம்பரம்  தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.  
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: 
கொள்ளிடத்தில் கதவணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி. 
மேலும், கல்லணை முதல் கடல் முகத்துவாரம் வரை கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு கதவணை வீதம் தொடர்ந்து கட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். காவிரி ஆறு பாசனத்துக்குரியது என்பதால் அதன் குறுக்கே உபரி நீர் திட்டம் என்ற பெயரில் புதிய தடுப்பணைகள் மூலம் நீர்ப் பாசன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்றார் அவர்.  
 விழாவில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் எம்.செந்தில்குமார், கொள்ளிடம் விஸ்வநாதன், பன்னீர்செல்வம், சீர்காழி சீனிவாசன், பி.முட்லுர் விஜயக்குமார், 
புதுச்சத்திரம் ராமச்சந்திரன், பிச்சாவரம் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com