தமிழ்த் தொண்டாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் அக்.2-இல் கடலூரில் இயற்கை மருத்துவப் பயிற்சி

கடலூரில் வருகிற அக்.2-ஆம் தேதி இயற்கை மற்றும் மரபு மருத்துவம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 


கடலூரில் வருகிற அக்.2-ஆம் தேதி இயற்கை மற்றும் மரபு மருத்துவம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 
 இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தம் அறிவுத் திருக்கோயில் தலைவர் ராசிராமலிங்கம், வாழ்வியல் மருத்துவ நிபுணர் கனக.திருமேனி ஆகியோர் கூறியதாவது: சரியான அடிப்படை மருத்துவ அறிவின்மையால் உடல் ஆரோக்கியத்தை இழந்து, பணத்தையும் விரயமாக்குவதுடன் மட்டுமின்றி சிலர் தங்களது உயிரையும் இழந்துவிடுகின்றனர். எனவே, பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் இயற்கை மற்றும் மரபு மருத்துவ பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
 காலை 8 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சி இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதில், ஒரு மனிதன் காலையில் எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான பழக்க வழக்கங்கள், உணவு, குடிநீர் போன்றவை குறித்து விளக்கப்படுகிறது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துகள், எதை விலக்க வேண்டும் என்ற விளக்கங்களும், மலர் மருத்துவம், வாழ்வியல் மாற்றம், மூலிகை தாவர மருத்துவம், தாது உப்பு மருத்துவ விளக்கம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
 நாம் 99 சதவீதம் மருந்தில்லா வாழ்வை வாழ முடியும். சர்க்கரை நோய், பெண்களுக்கான நோய்களை குணப்படுத்தும் உணவுகள், குழந்தை பேறுக்காக மேற்கொள்ள வேண்டிய உணவு, 
பழக்கவழக்கங்கள், மாணவர்களது கல்வித் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் 12 மணி நேரத்தில் 12 வகையான திட, திரவ உணவுகள் வழங்கப்படுகின்றன. 
 இந்த உணவுகளையும், பயிற்சியின்போது வழங்கப்படும் மருந்துகளையும் முன்கூட்டியே தயாரிக்க வேண்டியிருப்பதால் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கண்டிப்பாக பயிற்சி நடைபெறும் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்காக 97505 99222, 99947 49257 ஆகிய  எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com