மாணவி மீது திராவகம் வீசியவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவி மீது திராவகம் வீசிய சக மாணவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவி மீது திராவகம் வீசிய சக மாணவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ஆம் தேதி மாணவி ஒருவர் மீது சக மாணவரால் திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸார் வழங்குப் பதிவு செய்து, நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன் (23)  என்பரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
 இதுபோன்ற கொடுஞ்செயலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின்பேரில், முத்தமிழனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  உத்தரவிட்டார். இந்த உத்தரவானது கடலூர் மத்திய சிறையில் உள்ள முத்தமிழனிடம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com