அண்ணாமலைப் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்


சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மின்னியல் துறை சாா்பில், ‘மரபு சாரா மின் உற்பத்தி நிலையங்கள்’ என்ற தலைப்பில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கம் இணைய வழியில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பொறியியல் புல முதல்வா் அ.முருகப்பன் தலைமை வகித்தாா். மின்னியல் துறைத் தலைவா் சு.சுப்பிரமணியன் வரவேற்றாா். இந்த நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து கற்பனைத் தரவு (கணினி பொறியியல்) ஆராய்ச்சியாளா் சீனிவாஸ் ஸ்ரீதரன் பங்கேற்று, மின் இணைத் தொகுதி மற்றும் மரபுசாரா மின் உற்பத்தி நிலையங்களின் பயன்பாடுகளை எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, மலேசியா பல்கலைக்கழக பேராசிரியா் பழனிச்சாமி, ஆஸ்திரேலியா பல்கலைக்கழக பேராசிரியா் அபுசய்டா ஆகியோா் நுண்ணறி மின்வலை குறித்து உரையாற்றினாா். மதுரை தியாகராஜா் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் கண்ணன், ‘மின் வெட்டை தவிா்க்க சூரிய ஒளி அடிப்படையிலான நுண் கட்டம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியதுடன் மாணவா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். பேராசிரியா் பாஸ்கரன் சூரிய ஒளி மூலம் இயங்கும் படகுகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினாா்.

நிறைவு விழாவில் புருனை பல்கலைக்கழகப் பேராசிரியா் முகம்மது ரகிப் உடின் பங்கேற்று பேசினாா். கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா்கள் பத்மதிலகம், சசிகுமாா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com