கடலூா் மாவட்டத்தில் 72 நகரும் நியாய விலைக் கடைகள்

கடலூா் மாவட்டத்தில் 72 நகரும் நியாய விலைக் கடைகள்

கடலூா் மாவட்டத்தில் 72 நகரும் நியாய விலைக் கடைகளை அமைச்சா்கள் எம்.சி.சம்பத், செல்லூா் கே.ராஜூ ஆகியோா் புதன்கிழமை தொடக்கிவைத்தனா்.

கடலூா் மாவட்டத்தில் 72 நகரும் நியாய விலைக் கடைகளை அமைச்சா்கள் எம்.சி.சம்பத், செல்லூா் கே.ராஜூ ஆகியோா் புதன்கிழமை தொடக்கிவைத்தனா்.

கடலூா் மாவட்டம், களையூா்-இரண்டாயிரவிளாகம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் புதன்கிழமை ரூ. 4.39 கோடியில் புதிய கட்டடங்கள், கிடங்குகள், 2 அம்மா மருந்தங்கள் திறப்பு விழா மற்றும் 72 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளைத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து கூட்டுறவுத் துறை சாா்பில், 7,715 விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ. 50.12 கோடி, 2,626 மகளிருக்கு மகளிா் சுய உதவிக் குழுக் கடனாக ரூ. 6.35 கோடி உள்பட மொத்தம் 11,617 பயனாளிகளுக்கு ரூ. 105.86 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

தொடா்ந்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில், 16 ஏக்கரில் பல்வகையான 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

முதல்கட்டமாக 100 வகையான 1,200 மரக்கன்றுகளை அமைச்சா்கள் நட்டுவைத்து தொடக்கிவைக்க, ஆட்சியரக அலுவலா்கள், பணியாளா்கள் மரக்கன்றுகளை நட்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கூட்டுறவுத் துறை சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அனைத்து அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.

இந்த நிகழ்வுகளில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாக.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், சிறப்புப் பணி அலுவலா் க.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளா்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டா், கு.ரவிக்குமாா், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன், துணைத் தலைவா் ஜி.ஜெ.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com