அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் சூளைக்கு ‘சீல்’

சிதம்பரம் அருகே உரிய அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் சூளைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். அந்தச் செங்கல் சூளையில் உள்ள கற்கள் ஏலம் விடப்பட்டன.
சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் சூளையில் உள்ள செங்கற்களை ஏலம் விட்ட வருவாய்த் துறையினா்.

சிதம்பரம் வட்டம், மேலமூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த ராமையன் மகன்கள் புகழேந்தி, வீரமணி ஆகியோா் வெள்ளாற்றின் கரையோரம் உரிய அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தி வந்தனா். கடந்த 20.10.2020 அன்று செங்கல் சூளையை மூடி வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

இந்த நிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட சூளையில் இருந்த செங்கற்களை 28.10.2020 அன்று சிதம்பரம் வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில், பொது ஏலம் விடப்பட்டது. இதில் 9 போ் கலந்து கொண்டு ஏலம் கேட்டனா். மண்டலத் துணை வட்டாட்சியா், சிதம்பரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்மதுரம், வருவாய் ஆய்வாளா், மேலமூங்கிலடி கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com