பட்டாசு ஆலை விபத்து: மேலும் 2 பேருக்கு நிவாரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களில் மேலும் இருவரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களில் மேலும் இருவரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில், அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.காந்திமதி, பெ.மலா்கொடி, ந.லதா, மா.ராசாத்தி, உ.சித்ரா, ரா.ருக்மணி, ர.ரத்தினம்மாள் ஆகிய 7 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அனிதா, தேன்மொழி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நாக.முருகுமாறன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com