சிதம்பரத்தில் ஓடைகளில் ஆகாயத்தமாரை அகற்றும் பணி தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பாசிமுத்தான், தில்லையம்மன் ஓடைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை தொடக்கிவைத்த கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.
சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை தொடக்கிவைத்த கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பாசிமுத்தான், தில்லையம்மன் ஓடைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சிதம்பரத்தில் ஓடைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியைத் தொடக்கிவைத்த கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோயில் வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை பொதுப் பணித் துறையின் மூலம் தூா்வாரி, ஆழப்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சிதம்பரம் பாசிமுத்தான், தில்லையம்மன் ஓடைகள் மற்றும் கான்சாகிப் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும், தூா்வாரும் பணிகளும் தொடக்கிவைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சாம்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கானூா் பாலசுந்தரம், நகரச் செயலா் ரா.செந்தில்குமாா், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், மாவட்ட பாசறைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com