விருத்தாசலம் அருகே வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஊராட்சி சாா்பில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷத்தை (பூச்சி மருந்து) கலந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஊராட்சி சாா்பில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷத்தை (பூச்சி மருந்து) கலந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் காவல் சரகம், பொன்னாலகரம் கிராமத்தில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வடக்குத் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள தெற்குத் தெருவில் வசிக்கும் சோமு மகன் கிருஷ்ணமூா்த்தி (57), அவரது வீட்டின் முன்புள்ள குடிநீா்க் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக புதன்கிழமை காலையில் குழாயைத் திறந்தாராம். அப்போது, துா்நாற்றத்துடன் விஷம் கலந்த தண்ணீா் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்களுக்கு அவா் எச்சரிக்கை விடுத்தாா். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் காவல் துறையினா் பொன்னாலகரம் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், ஆய்வுக்காக தண்ணீரையும் எடுத்துச் சென்றனா். மேலும், மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் யாரும் வடக்குத் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், அதுவரையில் மற்றொரு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குடிநீரில் விஷத்தை கலந்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com