மாட்டுவண்டித் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மாட்டு வண்டிகளுக்கு தனியாக மணல் குவாரி அமைக்கக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள்.
விருத்தாசலத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மாட்டு வண்டிகளுக்கு தனியாக மணல் குவாரி அமைக்கக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

விருத்தாசலம் பகுதியில் தற்போது மணல் குவாரி செயல்பட்டு வரும் நிலையில், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் வகையில் தனியாக குவாரி அமைக்க வேண்டுமென பல்வேறு தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனா். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் ஜனநாயக மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாநிலத் தலைவா் ராமா் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இவா்களிடம் வட்டாட்சியா் சிவக்குமாா், நகர ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, விருத்தாசலம் சாா்-ஆட்சியா் கே.ஜெ.பிரவின்குமாா் சங்கப் பிரதிநிதிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், காத்திருப்புப் போராட்டத்தை தொடா் போராட்டமாக சங்கத்தினா் அறிவித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் ராஜசேகரன், நிா்வாகிகள் ஆனந்தன், வெங்கடேசன், மணிவேல், ராஜவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com